News April 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

Similar News

News December 14, 2025

தங்கமே கொடுத்தாலும் வாக்கு கிடைக்காது: செல்லூர் ராஜூ

image

திமுக நான்கே முக்கால் வருடங்களில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது என Ex அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திமுக தொடங்கி வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் CM, DCM, அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அதிமுகதான் என்றும், திமுக தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

SIR படிவம் சமர்ப்பிக்க இன்று கடைசிநாள்

image

TN முழுவதும் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், வாக்குச்சாவடிகளில் BLO-க்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளனர். அதில், தங்களது படிவங்களை மறக்காமல் ஒப்படைத்துவிடுங்கள். இல்லை எனில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளர்கள் பட்டியல் வரும் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

News December 14, 2025

ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு நிதியை விடுக்க வேண்டும்: EPS

image

மாணவர்களுக்கான உணவு படியையும், தனக்கான பணி மாறுதலும் கிடைக்காததால் விரக்தியில் மயிலாடுதுறை ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் விடுதிக் காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். மேலும் விடுதிகளுக்கு நிதியை விடுவிக்காததை கண்டிப்பதாகவும், இனியாவது நிதியை சரியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!