News May 5, 2024
ஹீரோயினை புகழ்ந்த சந்தானம்

“இங்க நான் தான் கிங்கு” பட நாயகி லயாவை பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் புகழ்ந்துள்ளார். ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தப் படத்தின் ஹீரோவாக சந்தானமும், ஹீரோயினாக லயாவும் நடித்துள்ளனர். இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், ஹீரோயின் லயாவை தான் ஹிந்தி நடிகை என நினைத்ததாகவும், ஆனால் சேலத்து பெண் என்றும், சிறப்பாக நடித்துள்ளார் என்றும் பாராட்டினார்.
Similar News
News November 12, 2025
டெல்லி சம்பவம்: 18 நாள்கள்.. இது மகாபாரத போர்!

டெல்லி சம்பவத்திற்கு இந்தியா பழிதீர்க்குமா என விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நெட்டிசன் ஒருவரின் பதிவு வைரலாகி வருகிறது. புல்வாமா தாக்குதலுக்கு 12 நாள்களிலும், பஹல்காம் தாக்குதலுக்கு 15 நாள்களிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அப்படியானால் டெல்லி சம்பவத்திற்கு எத்தனை நாள் எடுத்து கொள்ளப்படும் என அவர் கேட்க, மகாபாரத போர் போன்று 18 நாள்கள் ஆகும் என மற்றொரு நெட்டிசன் பதிலளித்துள்ளார்.
News November 12, 2025
விஜய் கட்சியில் சண்டை வெடித்தது

விஜய் – ஆதவ் அர்ஜுனா இடையில் மிக கடுமையான சண்டை நடந்து வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களுக்கு, சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்ட மேடையில் விஜய் அஞ்சலி செலுத்த, ஆதவ் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதேபோல், மத்திய பாஜக அரசை எதிர்ப்பதில் கட்சியின் நிலைப்பாட்டை மதிக்காமல் செயல்படுவது, திமுக மீது தனிமனித வெறுப்பு கொண்டு பேசுவது விஜய்க்கு பிடிக்கவில்லையாம்.
News November 12, 2025
ரஜினியை தொடர்ந்து கமலை இயக்குகிறாரா சுந்தர் சி?

‘அருணாச்சலம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என எதிர்பார்க்கவே இல்லை என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதுபோன்று மீண்டும் கமல்ஹாசனை இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அந்த படத்தையும் மிகச்சிறப்பாக இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கமல் நடிப்பில் ‘அன்பே சிவம்’ படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.


