News August 20, 2024

நெல்லையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

image

நெல்லையில் பணியின் போது மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்த தூய்மைப் பணியாளர் பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த பணம் போதாது என்றும், மேலும் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தூய்மை பணியாளர்கள் 1000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவு எட்டவில்லை என்றால் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Similar News

News January 22, 2026

மாநகர பகுதிகளில் இரவு ரோந்துப்பணி அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர காவல்துறை, இன்று {ஜனவரி.21} இரவு ரோந்துப்பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயரை, அறிவித்துள்ளது. அதன்படி, டவுண் பகுதியில் மனோகரன், பேட்டையில் மாசானமுத்து, சந்திப்பில் நடராஜன், பாளையில் முருகன், மருத்துவக் கல்லூரி பகுதியில் கோபால கிருஷ்ணன், மேலப்பாளையத்தில் கணேசன், பெருமாள்புரத்தில் செந்தில்குமார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

News January 21, 2026

நெல்லை: தலைமறைவான கொலை குற்றவாளி கைது

image

திருநெல்வேலி மாநகர காவல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொலை வழக்கில், தொடர்புடைய திருநெல்வேலி பெருமாள்புரம் சுகுமார், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் மீது நீதிமன்றத்தால் ‘பிடி வாரண்டு’ பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவான குற்றவாளி சுகுமாரை இன்று {ஜனவரி.21} பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

News January 21, 2026

நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!