News September 30, 2025

டிகிரி முடித்தால் ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News December 15, 2025

ராசி பலன்கள் (15.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 15, 2025

திகார் ஜெயிலை இடமாற்ற டெல்லி அரசு முடிவு

image

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜெயிலாக அறியப்படும் டெல்லியின் திகார் ஜெயிலை வேறு இடத்திற்கு மாற்ற பணிகள் நடந்து வருவதாக டெல்லி CM ரேகா குப்தா தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான கைதிகளுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது இங்கு 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அதிகமாக உள்ளனர்.

News December 15, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

image

சமூக நலத்துறை தரப்பில் கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4,68,554 மாணவர்களில் 2,87,997 மாணவர்கள் மட்டுமே காலை உணவுத் திட்டத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளதாம். இதனால், இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!