News October 17, 2025
₹30,000 சம்பளம்.. மத்திய அரசில் 610 காலியிடங்கள்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 610 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 21- 28. கல்வித்தகுதி: என்ஜினியரிங் டிகிரி. சம்பளம் ₹30,000. இதற்கு வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News November 10, 2025
வெள்ளி விலை இன்று ₹2,000 உயர்ந்தது

வெள்ளி மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று (நவ.10) கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹167-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும், அதில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பின்னர் விலை சரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
News November 10, 2025
அண்ணாமலையின் செயலால் PM மோடி மகிழ்ச்சி

கோவாவில் நடைபெற்ற ’அயர்ன்மேன் 70.3’ நிகழ்வில் பங்கேற்று நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை. இதனை பாராட்டி PM மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
News November 10, 2025
ஆண்ட்ரியாவை சிலை என வர்ணித்த விஜய் சேதுபதி

சிறிய வயதில் பீச்சில் பார்த்த சிலையும், ஆண்ட்ரியாவும் தற்போதுவரை ஒரே மாதிரி இருப்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். 2006-ல் ஒரு விளம்பரத்தில் ஆண்ட்ரியாவை பார்த்து ‘யார்ரா இந்த பொண்ணு!’ என நினைத்ததாகவும், நாளை தனது மகனும் அதே மாதிரி கேட்பார் என்றும் பேசியுள்ளார். மேலும், வீட்டுக்கு சென்று பெட்டில் படுப்பீங்களா, இல்லை ஃபிரிட்ஜில் உட்காருவீங்களா என கேட்டு அடுக்கடுக்காக வர்ணித்தார்.


