News July 10, 2024

ரஷ்யாவின் மிக உயர்ந்த ‘செயின்ட் ஆண்ட்ரூ விருது’

image

இயேசுவின் முதல் சீடராக கிறிஸ்தவர்களால் போற்றப்படுபவர் புனிதர் ஆண்ட்ரூ. அப்போஸ்தலரும் ஜார்ஜியா துறவியுமான அவரது நினைவாக 1698ஆம் ஆண்டு முதல் ‘செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் முதல் பேரரசரான பீட்டர் தி கிரேட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த விருது மிகச் சிறந்த சிவிலியன் (அ) ராணுவத் தகுதிக்காக மட்டுமே வழங்கப்படும் அந்நாட்டின் மிக உயர்ந்த & பழமையான அரச கௌரவமாகும்.

Similar News

News July 10, 2025

கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

image

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.

News July 10, 2025

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

News July 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.

error: Content is protected !!