News October 11, 2025

கார் வழிமறிப்பு பின்னணியில் RSS, BJP: திருமாவளவன்

image

தனது கார் வழிமறிக்கப்பட்ட நிகழ்வு ஒரு திட்டமிட்ட சதி என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அச்சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல என்று X-ல் பதிவிட்டுள்ள அவர், அதன் பின்னணியில் RSS மற்றும் BJP இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் செய்தி ஒளிபரப்பிய ஊடகத்தினரிடமும் அய்யமற விசாரணை நடத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 7, 2025

சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

image

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2025

விவேகானந்தர் பொன்மொழிகள்!

image

*நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது. *உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ். *பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. *வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

News November 7, 2025

ஆட்சியில் பங்கு கொடுத்தால் கூட்டணி: கிருஷ்ணசாமி

image

ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் 2026 தேர்தலில் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜன.7-ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அமைச்சரவையில் பங்கேற்றால் தான் மக்களின் குறைகளை போக்க முடியும் என்றும், அதற்கான அரசியல் களத்தை அமைப்போம் எனவும் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

error: Content is protected !!