News October 10, 2024
பாஜக ஆட்சியில் ரூ.7223 கோடி முறைகேடு?

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் கொரோனா தொற்றின்போது நடந்த முறைகேடுகள் தொடர்பாக அம்மாநில அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. பாஜக அரசின் தவறான நிர்வாகத்தில் ரூ.7223 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரிக்க துணை கமிட்டி அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழல் VS ஊழல் போட்டி ஆரம்பம்!
Similar News
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
News November 19, 2025
அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள்

சில புத்தகங்கள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. அவை விற்பனையையும் கடந்து உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. அவை எந்தெந்த புத்தகங்கள், எவ்வளவு விற்பனையாகி உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
Sports Roundup: SA அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு

*இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு. *முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. *வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. *100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெறவுள்ளார்.


