News July 15, 2024
ரவுடி திருவேங்கடம் உடல் ஒப்படைப்பு

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நேற்று நள்ளிரவில் முடிந்தது. இதையடுத்து, உடல் அவரது தந்தை கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை மூலக்கொத்தளம் சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 8, 2025
சுவாமிக்கு சாற்றும் மாலையை பக்தர்கள் அணியலாமா?

கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.
News July 8, 2025
பாமகவில் தொடரும் மோதல்.. அதிமுகவுக்கு தாவிய Ex மா.செ.,

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் மோதலால் அதிருப்தியில் பலர் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் காசி நெடுஞ்செழியன் தலைமையில் 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். நெய்வேலியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெய்வேலி பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியாகும்.
News July 8, 2025
கடன் செயலிகளில் கடன் வாங்குவதற்கு முன்..

உடனடி தேவைக்காக கடன் செயலியில் கடன் வாங்குவோர், இவற்றை கவனியுங்க:
*கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
*வாங்க நினைத்தால், அந்த ஆப் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்பதை கவனிக்கவும்
*அத்துடன் அந்த செயலி NBFC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*Playstore-ல் இருக்கும் ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும். மெசெஜ் வழியாக கிடைக்கும் ஆப்களில் கடன் பெற வேண்டாம்.