News September 29, 2025

நாடு முழுவதும் உயருகிறது.. அரசு அறிவித்தது

image

ஸ்பீட் போஸ்ட் சேவை கட்டணங்கள் அக்.1 முதல் உயர்த்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அதன்படி Local parcel service கட்டணம் (50கி) ₹15-லிருந்து ₹19 ஆக உயர்கிறது. எடை, தொலைவுக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது (மேலே படத்தை ஸ்வைப் செய்து பார்க்கவும்). அதேநேரம், OTP அடிப்படையில் சேவை, ரியல்டைம் டிராக்கிங், ஆன்லைன் புக்கிங் உள்ளிட்ட புதிய சேவைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News November 17, 2025

BREAKING: கனமழை.. முதல் மாவட்டமாக விடுமுறை

image

நள்ளிரவில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாகைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News November 17, 2025

காப்பிரைட் பற்றி சிந்திப்பதில்லை: தேவா

image

தற்போது நிறைய பேர், தங்கள் பாடல்கள் பிற படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு காப்பிரைட் கேட்கின்றனர், ஆனால் அதை பற்றி தான் சிந்திப்பதே இல்லை என்று தேவா கூறியுள்ளார். பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கின்றனர் என்பதற்காக, தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கவில்லை என கூறிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது பாடல்கள் ரசிக்கப்படுவதையும் கூறி நெகிழ்ந்தார்.

News November 17, 2025

₹10,000 லஞ்சம் கொடுத்து வென்ற BJP: செல்வப்பெருந்தகை

image

பிஹார் தேர்தலில் காங்., தோல்வி அடையவில்லை, ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். பிஹாரில் உள்ள 1.21 கோடி பெண்களுக்கு தலா ₹10,000 கொடுத்து பாஜக வென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மக்களின் GST பணத்தை பாஜக பிஹாரில் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 6-ல் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!