News August 6, 2024
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்: திருமா

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெற முடியுமென விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பி.சி, எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் எனக் கூறிய அவர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 18, 2026
நெல்லை: கஞ்சாவை வைத்து கொண்டே போலீசுக்கு மிரட்டல்!

பாளை போலீசார் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த எம்.கே.பி நகரை சேர்ந்த முத்துசாமி (36) என்பவரை சோதனை செய்ய முற்பட்டபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு பேசி அச்சுறுத்தியுள்ளார். அவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்தனர்.
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


