News August 5, 2024
ரூ70,000 கோடி இழந்த ரிலையன்ஸ் நிறுவனம்

இந்தியப் பங்குச்சந்தையின் இன்றைய சரிவு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை ரூ.102 குறைந்து ரூ.2,896க்கு வர்த்தகம் ஆனது. இதனால், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.70.195.32 கோடியை இழந்தது. இதேபோல, டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களும் மதிப்பினை இழந்தன.
Similar News
News January 22, 2026
திருச்சி மண்டலத்தில் 59 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணி இடமாற்றம் செய்து மத்திய காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மண்டலத்தில் ஒரே நேரத்தில் 59 காவல் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் எதிரொளியாகவும் இந்த பணியிடமாற்றம் நடைபெற்றிருக்கிறது.
News January 22, 2026
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.21) இரவு முதல் நாளை (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!