News November 13, 2025

RCB அணியை வாங்குகிறதா ஹோம்பாலே பிலிம்ஸ்?

image

நடப்பு IPL சாம்பியன் RCB அணி ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த அணியை யார் வாங்குவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், RCB அணியை வாங்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. KGF, காந்தாரா படங்களை ஹோம்பாலே பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஹோம்பாலே பிலிம்ஸ் RCB-ஐ வாங்கினால் அந்த அணிக்கு என்ன பெயர் வைக்கலாம்’னு சொல்லுங்க?

Similar News

News December 11, 2025

திமுகவை வைத்து வளர நினைக்கும் விஜய்: DMK

image

சமீபத்தில் நடந்த புதுச்சேரி கூட்டம் உட்பட, தொடர்ந்து விஜய் திமுகவை தாக்கி பேசிவருவதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். எல்லா கட்சிகளுமே திமுகவையே போட்டியாக நினைப்பதாகவும், அதன் மூலம்தான் தாங்கள் வளர முடியும் என்றும் அவர்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்கள் எனவும் பேசியுள்ளார். ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

இன்று விடுமுறை எடுத்தால்… அரசு முக்கிய உத்தரவு

image

அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (டிட்டோஜாக் அமைப்பு) இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பை தவிர, வேற எந்தவித விடுப்பும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 11, 2025

செங்கோட்டையன் என்னை எதிர்த்து போட்டியா? நயினார்

image

நயினார் நாகேந்திரன் எங்கு நின்றாலும், டெபாசிட் இழக்க செய்வதே நோக்கம் என KAS பேசியிருந்தார். இந்நிலையில், ‘செங்கோட்டையன் எனக்கு வேண்டியவர். அவருக்கு என் மீது என்ன கோபம் என தெரியவில்லை. TVK இன்னும் வளரவில்லை. எடுத்ததும் ஆட்சிக்கு வருவோம் என்றால், எப்படி நியாயம்?’ என நயினார் கேட்டுள்ளார். தன்னை டெபாசிட் இழக்க செய்ய, KAS நெல்லையில் போட்டியிடுகிறாரா என்பது பற்றி தெரியாது என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!