News March 22, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார் ரூம் மூலம் தவெக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாகவே கண்காணிப்பார் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News November 8, 2025
நடிகை கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார்

நடிகை கௌரி கிஷனை உருவக்கேலி செய்த குற்றச்சாட்டில் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காயப்பட்டிருந்தால் Sorry எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘தன்னுடைய கேள்வி தவறு’ என கூறாமல் இன்னமும் ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என யூடியூபர் கூறுவதால் சரியான முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் சாடி வருகின்றனர்.
News November 8, 2025
IND Vs AUS T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

IND Vs AUS 5-வது T20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்(C), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர். ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும்.


