News June 8, 2024
எதிர்க்கட்சித் தலைவராகும் ராகுல்

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், மக்களவைக் குழுத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டுமென சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான மூத்த தலைவர்கள், ராகுல்தான் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராக வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மக்களவையில் 99 (+1 சுயேச்சை) இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்க்கட்சி அந்தஸ்தை இம்முறை பெறவுள்ளது.
Similar News
News July 9, 2025
பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
News July 9, 2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.
News July 9, 2025
கோயில் நிதியில் கல்லூரியா? இபிஎஸுக்கு சேகர்பாபு பதிலடி

அறியாமை இருளில் இபிஎஸ் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கோயில் நிதியை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுவதாக கோவை பிரச்சாரத்தில் <<17000758>>இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு<<>> சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு தெரியாமல் இபிஎஸ் பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.