News August 5, 2024
வடகொரியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் புதின்!

வடகொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ள பாதிப்புகளில் மீள ரஷ்யா உறுதுணையாக இருக்குமென அந்நாட்டின் அதிபர் புதின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். வடகொரியாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி, அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், வடகொரியா & சீன எல்லைப் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Similar News
News January 20, 2026
BREAKING: கூட்டணி முடிவு.. விஜய்க்கு அதிர்ச்சி

பாஜகவின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள <<18905172>>நிதின் நபினுக்கு<<>>, TTV தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது NDA கூட்டணியில் அமமுக இணைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முன்னதாக, தவெகவுடன் அமமுக கூட்டணி வைக்கும் என கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக NDA பக்கமே TTV பார்வை மாறியிருப்பதால், விஜய் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
News January 20, 2026
ஆயுள் காப்பீடு எவ்வளவு தொகைக்கு எடுக்க வேண்டும்

ஆயுள் காப்பீடு எடுக்கும் போது, பலரும் எவ்வளவு தொகைக்கு அதனை எடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. அதனை தீர்க்க ஈஸி கணக்கு ஒன்று உள்ளது. உங்களின் ஆண்டு வருமானத்தை விட ஆயுள் காப்பீடு 10 மடங்கு இருக்க வேண்டும். அதாவது, ஆண்டு வருமானம் ₹10 லட்சமாக இருந்தால், ₹1 கோடிக்கு காப்பீடு எடுக்க வேண்டும். ஒருவரின் இறப்பிற்கு பின், குடும்பம் பொருளாதாரச் நெருக்கடியில் சிக்காமல் தடுக்க ஆயுள் காப்பீடு உதவும்.
News January 20, 2026
Spiderman-ஆக மாறும் தனுஷ்?

சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ள ‘Avengers: Doomsday’ படத்தில் தனுஷ், Spiderman கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். Doomsday பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களின் ‘The Greyman’ படத்தில் தனுஷ் ஏற்கெனவே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Spiderman-ஆக எப்படி இருப்பார் தனுஷ்?


