News August 12, 2025
மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?
Similar News
News August 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 425 ▶குறள்: உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
News August 12, 2025
நெடுஞ்சாலையை தனியாருக்கு விட அன்புமணி எதிர்ப்பு

வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 60 KM நீளமுள்ள இச்சாலையை ஏலம் எடுக்கும் நிறுவனம் 25 வருடங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெறுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் கட்டிய சாலையை தனியாரிடம் ஒப்படைப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.