News September 30, 2025
வரலாறு காணாத விலை உயர்வு.. இதுவே முதல்முறை

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ₹1 உயர்ந்து ₹161-க்கும் கிலோ வெள்ளி ₹1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை இதுவரை இல்லாத உச்சமாக ₹16 ஆயிரம் உயர்ந்துள்ளது. வரும் நாள்களிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 7, 2025
இந்தியாவுக்கு எதிராக ரெக்கார்டு படைத்த டி காக்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ODI-ல் சதம் அடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சதமடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். அவர் IND-வுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார். கில்கிறிஸ்ட் Vs SL மற்றும் சங்கக்காரா Vs IND, தலா 6 சதங்கள் விளாசியிருந்தனர். மேலும், ODI-ல் அதிக சதம் அடித்த WK பட்டியலில் சங்கக்காராவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருவரும் தலா 23 சதமடித்துள்ளனர்.
News December 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 542
▶குறள்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
▶பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
News December 7, 2025
ஹிந்தி திணிப்பை ஏற்க கூடாது: அன்புமணி

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கிய UGC-க்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 3-வது மொழியாக அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எதையும் கற்கலாம் என கூறினாலும், அது மறைமுக ஹிந்தித் திணிப்பு தான் என்றும் சாடியுள்ளார். இந்த உத்தரவை UGC திரும்ப பெற வலியுறுத்தியுள்ள அவர், TN-ல் இது அனுமதிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


