News January 13, 2025
பொங்கல் விடுமுறை: இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில்

பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில், முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலை சென்னை- மதுரைக்கு இன்று தெற்கு ரயில்வே இயக்குகிறது. எழும்பூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு ரயில் புறப்பட்டு மதுரையை இரவு 12.30க்கு சென்றடையும். இதேபோல், எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே இன்று சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
நவம்பர் 8: வரலாற்றில் இன்று

*1680–தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்தநாள். *1910–தவில் கலைஞர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை பிறந்தநாள். *1927–மூத்த அரசியல்வாதி அத்வானி பிறந்தநாள் *1947–பாடகி உஷா உதுப் பிறந்தநாள். *1966–அரசியல்வாதி சீமான் பிறந்தநாள். *1987–எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமி மறைந்த நாள். *1989–நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள். *2006–அரசியல்வாதி கா.காளிமுத்து மறைந்த நாள். *2016–PM மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த நாள்.
News November 8, 2025
இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.
News November 8, 2025
பிக்பாஸ் ஒரு ஆபாசமான நிகழ்ச்சி: வேல்முருகன்

விஜய் சேதுபதி நடத்தும் பிக்பாஸ் தமிழை மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான நிகழ்ச்சி என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கும் தனக்கு எந்தவித தகராறும் இல்லை என்றும், இது குடும்ப உறவுமுறையை சிதைக்கும் நிகழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்தை அறிந்த பிறகே நிகழ்ச்சிக்கு தடை கோரி போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


