News July 11, 2024

அயோத்தி நிலங்களை குறி வைத்த அரசியல்வாதிகள்

image

ராமர் கோயிலை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து, அயோத்தியை சுற்றியுள்ள 25 கிராமங்களில் நில விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலங்களை வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என்பதும் அம்பலமாகியுள்ளது. அருணாச்சல பிரதேச துணை முதல்வரின் மகன்கள், பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷன் மகன் உள்பட பலர் நிலங்களை வாங்கி விற்று லாபம் அடைந்துள்ளனர்.

Similar News

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து.. சுக்கு நூறாகி போன கனவுகள்!

image

பள்ளி வேன் விபத்தில் அக்கா, தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சி என்றால், ஒரு தந்தையின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிப் போனது பெருந்துயரம். மகள் சாருமதியை டாக்டராக்க வேண்டும் என்றும், மகன் செழியனை IAS அதிகாரியாக்க வேண்டும் எனவும் தந்தை திராவிட மணி ஆசையில் இருந்திருக்கிறார். அவருக்கு இப்போது கிடைத்திருப்பது கனவுகள் சிதைந்த 2 உடல்கள் மட்டுமே. RIP

News July 8, 2025

காது குடைய buds யூஸ் பண்ணால்… எச்சரிக்கை

image

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 8, 2025

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்

image

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல் நலக்குறைவால் சில நாள்களாக ஜோத்பூர் எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிர் பிரிந்தது. ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராகவும் வருமான வரி ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அஷ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!