News April 9, 2024

தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும்

image

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது. ஆனால், நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியை பாஜகவில் இணைத்ததாக கூறினார். மேலும், திராவிட கட்சிகள் இந்த தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்றார்.

Similar News

News December 12, 2025

நீங்கள் இதில் படம் பார்த்தது உண்டா? Must feel..

image

இன்று OTT-யில் படம் பார்த்து வரும் நாம், முன்னதாக டிவியில் படம் பார்த்தோம். அப்போது, DVD-க்களில் படங்களை கண்டு களித்திருப்போம். பெற்றோரிடம் அடம்பிடித்து ₹20, ₹40 ரூபாய்க்கு சிடி வாங்கி படம் பார்த்த காலங்கள் அழகானவை. இதற்காக டிவிடி பிளேயர் வாங்கி, அதிலுள்ள மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஒயரை சரியாக கனெக்ட் செய்வதில் நாம் தான் கிங் என்று கூட நினைத்திருப்போம். நீங்கள் கடைசியாக சிடியில் பார்த்த படம் எது?

News December 12, 2025

ரயில்வேக்கு சொந்தமாக இவ்வளவு நிலமா?

image

ரயில்வேக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய கேள்விக்கு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் இந்திய ரயில்வேக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1068.54 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், RPF & உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

News December 12, 2025

நாளை பள்ளிகள் இயங்கும்.. அரசு அறிவிப்பு

image

புதுச்சேரியில் நாளை(டிச.13) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த வாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடுசெய்யும் விதமாக, வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் இதேபோன்று அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!