News April 30, 2024
மணிப்பூர் சம்பவத்தில் போலீசார் உடந்தை

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடி ஒளிந்ததாகவும், காவலர்கள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
23 நாள்கள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

2026-ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாள்களின் பட்டியலை அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜன.1 (ஆங்கில புத்தாண்டு), ஜன.15, 16, 17 (பொங்கல் விடுமுறை), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 (தைப்பூசம்), மார்ச் 21 (ரம்ஜான்), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு), மே 1 (தொழிலாளர் தினம்), ஜூன் 26 (மொஹரம் பண்டிகை), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.14 (விநாயகர் சதுர்த்தி) உள்ளிட்ட 23 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
CM விமானப் பயணத்துக்கு மட்டும் ₹47 கோடி செலவு

கடந்த 2 ஆண்டுகளில் விமானப் பயணங்களுக்கு மட்டும், ₹47 கோடியை கர்நாடக CM சித்தராமையா செலவு செய்துள்ளது அரசு ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சோசலிச தலைவர் என சொல்லிக்கொண்டு அரசு பணத்தை சித்தராமையா விரையம் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது. முன்னதாக மோடியின் விமான பயணங்களை காங்., கடுமையாக சாடி வந்த நிலையில், இப்போது சித்தராமையாவை BJP வறுத்தெடுத்து வருகிறது.
News December 12, 2025
தனி நபர் தீபமேற்ற முடியாது: அரசு தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, மதுரை HC அமர்வில் தொடங்கியது. இதில் உச்சி பிள்ளையார் கோயில் தவிர, தனிநபராக வேறு எந்த இடத்திலும் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.


