News January 13, 2025
ரூ.10 ஆயிரமாக உயரும் PM-கிசான் உதவித்தொகை?

வரும் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், PM-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இது இனி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 18 தவணைகள் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நல்ல செய்தி வருமா?
Similar News
News November 7, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் Ex MP சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியுள்ளார். Ex MP சத்யபாமா, கடந்த 30-ம் தேதி செங்கோட்டையனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யபாமாவை ஏற்கெனவே மாவட்ட மகளிர் அணி பொறுப்பிலிருந்து EPS நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
இது என்னடா சீன அதிபருக்கு வந்த புது சோதனை!

தென் கொரியாவில் டிரம்பை சந்தித்தபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் சிரித்து பேசும் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ சீனாவில் வெளியாகாதாம். ஏனென்றால், போட்டோஸ் மற்றும் தகவல்களை பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருப்பதால் அங்கு இது வெளியாகாது. ஆனால், சீன அதிபரின் இந்த மறுபக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
News November 7, 2025
மாதவிடாயின் போது குமட்டல் வருதா? இதோ தீர்வு

மாதவிடாய்க்கு முன் குமட்டல் உணர்வு ஏற்படுகிறதா? ஒரு பொருளை வைத்தே இதனை ஈஸியாக சரி செய்யலாம். காலையில் இஞ்சி டீ குடிப்பது இதற்கு சரியான தீர்வாக அமையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியே நடைபயிற்சி சென்று நல்ல காற்றை சுவாசிப்பதும் கூட குமட்டலை சமாளிக்க உதவியாக இருக்கும் என்கின்றனர். அனைத்து பெண்களுக்கும் SHARE THIS.


