News March 31, 2025

PM இன்டர்ன்ஷிப்: பதிவு செய்ய இன்றே கடைசி நாள்

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 31) கடைசி நாளாகும். தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து PM இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக் கணக்கில் மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேர <>www.pminternship.mca.gov.in.<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News July 8, 2025

டெக்சாஸை மூழ்கடித்த பெரு வெள்ளம்… 104 பேர் உயிரிழப்பு

image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கெர் கவுண்ட்டியில் மட்டும் சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பலரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

News July 8, 2025

இரவு 10 மணிக்கு என்ன நடக்கப் போகிறது?

image

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

News July 8, 2025

செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி

image

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20-ல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!