News August 22, 2024
இ-காமர்ஸ் சர்ச்சைக்கு பியூஷ் கோயல் விளக்கம்

மத்திய அரசு இ-காமர்ஸ் துறைக்கு எதிரானது அல்ல என Union Min. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், சில்லறை விற்பனையாளர்களுக்கு நியாயமான வாய்ப்பை உறுதி செய்ய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் சந்தையிலும், அந்நிய நேரடி முதலீட்டையும் அரசு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, இ-காமர்ஸ் நிறுவனங்களின் கொள்ளை விலை கவலை அளிப்பதாக அவர் கருத்து கூறியது பேசுபொருளானது.
Similar News
News November 8, 2025
BREAKING: மருத்துவமனைக்கு விரைந்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டவுடன் பதறிப்போன ரஜினி, ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று அண்ணனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
News November 8, 2025
பாஜக, விஜய்யை மறைமுகமாக சாடிய மு.க.ஸ்டாலின்

ஒரே நேரத்தில் பாஜக, விஜய்யை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவின் வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள் என்று பாஜகவையும், நேற்று கட்சி ஆரம்பித்த உடன் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று விஜய்யையும் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மேலும், திமுகவை போல் வெற்றிபெற வேண்டும் என்றால் திமுகவை போன்ற அறிவும், உழைப்பும் தேவை எனக் கூறினார்.
News November 8, 2025
மார்க் மீது புகார் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

உலகின் 4-வது பெரிய பணக்காரரான மார்க் சக்கர்பெர்க் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்ன காரணம் தெரியுமா? அரசு அனுமதி பெறாமல் மனைவியுடன் சேர்ந்து வீட்டிலேயே ‘Bicken Ben School’ என்ற பள்ளியை நடத்தி வந்ததாக அண்டை வீட்டார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நகர நிர்வாகம் பள்ளிக்கு தடை விதித்தது. இந்நிலையில், பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக சக்கர்பெர்க் தரப்பு கூறுகிறது.


