News March 28, 2024
தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி

தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, பாஜக அளித்த பட்டியலில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News January 13, 2026
யாருக்கெல்லாம் தமிழக அரசின் விருது?

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சிறந்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோரின் பட்டியலை அறிய, மேலே போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க.
News January 13, 2026
பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.
News January 13, 2026
கவலை வேண்டாம்: ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச சேவை

EPFO ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம். இந்த சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும். இதுவரை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால் 033-22029000 என்ற எண்ணுக்கு கால் செய்தால் போதும், அருகிலுள்ள தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, சான்றிதழை சமர்ப்பித்துவிடுவார்கள்.


