News August 20, 2024

நெல்லையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் & குடும்ப ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் சாரா மார்கரெட் தலைமையில் இன்று(ஆக.,20) கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனி, மெடி அசிஸ்டன்ட் அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். SHARE IT.

Similar News

News January 20, 2026

நெல்லை: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

நெல்லை மக்களே.., உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

நெல்லை: பள்ளி வளாகத்தில் நடந்த திருட்டு

image

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 20, 2026

நெல்லை: பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்தம் செய்யணுமா?

image

நெல்லை அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தில் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் ஜன.23ம் தேதி திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு 23ம் தேதி சிறப்பு மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்த சேவைகளை, சேவை வாகனம் மூலம் எளிதாக பெறலாம். *SHARE

error: Content is protected !!