News May 5, 2024
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா

பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளை கடந்த மார்ச் 15ஆம் தேதியுடன் நிறுத்திய நிலையில், அந்நிறுவனத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாகவும், பேடிஎம் நிறுவனத்திற்கு எப்போதும் தனது ஆதரவு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
வெள்ளை தங்கத்தின் விலை குறைவா?

சாதாரண தங்கத்தில் எவ்வளவு தங்கம் இருக்கோ அதே அளவு தங்கம் தான் வெள்ளை தங்கத்திலும் இருக்கிறது. ‘ரோடியம்’ என்ற சில்வர் நிற உலோகம் மூலம் முலாம் பூசப்படுவதுதான் இதிலிருக்கும் ஒரே வித்தியாசம். எனவே மஞ்சள் தங்கத்திற்கு மார்க்கெட்டில் என்ன விலையோ, வெள்ளை தங்கத்திற்கும் அதேதான். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், வெள்ளை தங்கம் அடிக்கடி கருத்துபோகும். அதனால் பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகம். SHARE.
News November 10, 2025
SIR-க்கு எதிராக தமிழக காங்., மதிமுக வழக்கு

SIR-க்கு எதிராக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என SC அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News November 10, 2025
ஆதாரில் வரும் அதிரடி மாற்றம்.. கவனியுங்க மக்களே!

‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆதார் கார்டு சேவையிலும் AI தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் வரவுள்ளன ✦AI: மோசடிகளை குறைக்கவும் முடியும் ✦குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பது ✦பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என கூறப்படுகிறது.


