News August 23, 2025
Parenting: பிள்ளைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போதா?

உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுதா? அப்போது, இந்த 6 பொருள்களை அவர்களின் உணவு பழக்க வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். மஞ்சள், சக்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளைப்பூண்டு, ப்ரோக்கோலி, காளான், கீரை வகைகளை குழந்தையின் Diet-ல் சேர்த்தால் கட்டாயம் 1 மாதத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.
Similar News
News January 15, 2026
சற்றுமுன்: ‘விஜய் உடன் பொங்கல்’

டெல்லியில் PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பங்கேற்றதை காங்., விமர்சித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ஒரு நடிகராக இருந்திருந்தால் அவரையும் இந்த விழாவிற்கு அழைத்திருப்போம் எனத் தமிழிசை கூறியுள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸாகும் போதே தங்களுக்கு பொங்கல் என விஜய் ரசிகர்கள் கூறிவிட்டதால், அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பொங்கல் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.


