News October 15, 2025
எடப்பாடி அல்ல ‘பொய்’பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி

சட்டசபையில் EPS முழுக்க பொய்யை மட்டுமே பேசியதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என EPS கனவு காண்பதாக விமர்சித்துள்ளார். விஜய்யின் எல்லா கூட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய ரகுபதி, எத்தனை கூட்டணி அமைந்தாலும் திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
BREAKING: முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல்லில் வரலாறு காணாத புதிய உச்சமாக முட்டையின் கொள்முதல் விலை ₹5.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இதுதான் அதிகபட்ச விலையாகும். முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரிப்பு காரணமாக விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சில்லறை கடைகளில் 1 முட்டையின் விலை ₹7 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.
News November 15, 2025
Show-off ஆட்சியில் TN-க்கு எப்படி தொழில்கள் வரும்? EPS

TN-க்கு தொழில் தொடங்க வரவேண்டிய கொரியாவின் ஹ்வாசங் நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள EPS, 4 ஆண்டுகளாக பொம்மை முதல்வர் ஷோ காட்டியதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் ஊழல்கள் என சீர்குலைந்துள்ள இந்த ஆட்சியில் எப்படி தொழில் நிறுவனங்கள் TN-க்கு வரும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 15, 2025
பண மழை கொட்டும் 6 ராசிகள்

நாளை(நவ.16) துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைவதால் 6 ராசியினருக்கு அதிர்ஷ்டம். *மிதுனம்: பண வரவு அதிகரிக்கும். *கடகம்: பணியில் ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு. *சிம்மம்: நிலம், சொத்து, வாகனங்களால் பயன் அடையலாம். *கன்னி: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். *தனுசு: பண வரவு அதிகமாவதால் நிதிநிலை மேம்படும். *மகரம்: வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும்.


