News March 27, 2024
‘அரண்மனை 4’ ஏப்ரலில் வெளியீடு

சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாரர் + காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 4ஆம் பாகத்தை, நடிகை குஷ்பூ தயாரித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு கோவை சரளா, சிங்கம் புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Similar News
News November 17, 2025
ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் 500% வரி: டிரம்ப்

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500% வரி விதிக்கும் செனட் மசோதாவை ஆதரிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் போருக்கு கிடைக்கும் நிதியுதவியை குறைக்க, அந்நாட்டுடன் வணிகம் மேற்கொள்ளும் பிற நாடுகளுக்கு இதுபோன்ற வரிவிதிப்புகள் வழிவகுக்கும் என ஏற்கெனவே டிரம்ப் கூறியிருந்தார். முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதை சுட்டிக்காட்டி, இந்தியாவுக்கு 50% வரியை USA விதித்தது.
News November 17, 2025
தேனி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி!

தேனி: மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு<
News November 17, 2025
காளையார்கோவில் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

காளையார்கோவில் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள கன்மாயில் உறவினர்கள் மீன் பிடித்து வருவதாக சொல்லி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பருத்திக்கன்மாய் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (25) என்ற இளைஞர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.


