News August 6, 2024

வங்கதேச கலவரத்தில் பாகிஸ்தான்: ராகுல் கேள்வி

image

வங்கதேசத்தில் நிகழ்ந்து வரும் பயங்கர கலவரத்தால், உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, வங்கதேச கலவரத்துக்கு பின்னால் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது என்றார்.

Similar News

News January 18, 2026

தமிழக தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு

image

திமுக, அதிமுக, தவெகவை தொடர்ந்து பாஜகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் VP துரைசாமி, ராமலிங்கம், ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக பெண்களுக்கு <<18879251>>மாதம் ₹2000<<>> உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

News January 18, 2026

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

மங்களகரமான இந்த புத்தாண்டில் முதல்முறையாக பிப்.6-ல் சூரியன் அவிட்டம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் செழுமையாக கிடைத்து ஸ்திரத்தன்மை உண்டாகும். சரியான முதலீடுகளால் லாபமும் பெருகும். பதவி உயர்வு உங்களை தேடிவரும். காதல் கைகூடுவது மட்டுமல்லாமல், கணவன் – மனைவி உறவும் பலப்படும் என வேத ஜோதிடம் கூறுகிறது.

News January 18, 2026

உடலை நீரேற்றமாக வைத்திருக்க இத பண்ணுங்க

image

நாம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், நீரேற்றத்திற்கு தண்ணீரை விட பால் சிறந்ததாம். பாலில் நேச்சுரல் சுகர், புரதம், கொழுப்பு மற்றும் உடல் சீராக செயல்படுவதற்கான மைக்ரோ நியூட்ரியண்ட்கள், எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஜீரணமாவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், உடலில் திரவங்கள் நீண்ட நேரம் தங்கி நீரேற்றத்தை தக்கவைக்க உதவுகின்றன. SHARE IT

error: Content is protected !!