News April 25, 2025

பாக். துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

image

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நேற்று உதம்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர்.

Similar News

News February 19, 2026

மகா.,வில் முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து

image

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 2014-ல் காங்.,- NCP கூட்டணி இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்பை கோர்ட்டும் இந்த இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டதாக நேற்று மகா அரசு அறிவித்துள்ளது.

News February 19, 2026

3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

image

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். இக்கோயிலின் முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

இந்த 3 இடங்களில் ஜெயித்தால் கோட்டை கன்ஃபார்ம்!

image

தமிழக தேர்தல் களத்தில் கட்சிகளின் வியூகம் எந்த அளவிற்கு பார்க்கப்படுகிறதோ, அதே அளவிற்கு சென்டிமெண்டும் கவனிக்கப்படும். அந்தவகையில் ராமநாதபுரம், நாமக்கல், வேடச்சந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகிறது. அதன்படியே 1967 முதல் 2016 வரை இந்த 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் அல்லது அதன் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது என்பது தான் வரலாறு.

error: Content is protected !!