News April 5, 2024

நீலகிரி தொகுதியின் விருந்தாளி எல்.முருகன்

image

நீலகிரி தொகுதியின் விருந்தாளி எல்.முருகன் என ஆ.ராசா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு செய்ய வேண்டும் என்பதற்காக பல சட்டங்களை மத்திய அரசு மாற்றியதாக கூறிய அவர், எதற்கு சட்டங்களை திருத்துகிறார்கள் என்று கூட எம்.பிக்களான எங்களிடம் தெரிவிக்கவில்லை என்றார். மேலும் பேசிய அவர், உச்சநீதிமன்றம் இதை கூறிய உடன் சிறிய தவறு நடத்துவிட்டது என பாஜக கூறுவது அயோக்கியத்தனம் என சாடினார்.

News April 5, 2024

நாதக வேட்பாளரை விரட்டியடித்த மக்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழமூவக்கரை மீனவ கிராம மக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற நாதக வேட்பாளர் காளியம்மாள், “நானும் மீனவ பெண் தான் உங்கள் பிரச்னை எனக்கும் தெரியும்” என கூற, அதற்கு அப்பகுதி மக்கள், “எந்த அரசியல் கட்சியையும் நம்ப போவது இல்லை” எனக் கூறி அவரை விரட்டியடித்தனர்.

News April 5, 2024

IPL: வெற்றிப் பாதைக்கு திரும்புமா CSK?

image

சென்னை – ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான 18ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பலம் வாய்ந்த ஐதராபாத் உடன் மோதுவதால், போட்டி கடுமையாக இருக்கும்.

News April 5, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி சாகு
▶அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏன் போட்டியிடுகிறார்?: கனிமொழி கேள்வி
▶தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல் உள்ளது: சீமான் விமர்சனம்
▶வடிவேலுவுக்கு அரசியல் யோகம் அறவே இல்லை: நடிகர் சிங்கமுத்து
▶வார இறுதி விடுமுறையையொட்டி, 925 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு
▶ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

News April 5, 2024

தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள்.

News April 5, 2024

திமுகவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கிறது

image

பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும் போதும், திமுகவுக்கு 2% வாக்கு அதிகரிக்கிறது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமா் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகம் வரட்டும். தமிழகத்தில் அவருடைய செல்வாக்கு என்ன என்பதை வடமாநிலங்கள் அனைத்துக்கும் தெரிந்து கொள்ளட்டும். தமிழகத்திலிருந்து பாஜகவை அகற்ற கிகிரே

News April 5, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 5, பங்குனி – 23 ▶கிழமை – வெள்ளி
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM, 6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM
▶குளிகை நேரம்: 7:30 AM – 9:00 AM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: துவாதசி
▶நட்சத்திரம்: 6:06 PM வரை அவிட்டம் பிறகு சதயம்

News April 5, 2024

புதிய மைல் கல்லை எட்டிய 2024 ஐபிஎல் தொடர்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளை மட்டும், சுமார் 35 கோடி பேர் தொலைக்காட்சி வாயிலாக கண்டு ரசித்துள்ளனர். இதனால் 2024 ஐபிஎல் தொடர், ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த தொடராக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த ஐபிஎல் தொடரில், ரச்சின் ரவீந்திரா, மயங்க் யாதவ், ஷஷாங் சிங் போன்ற நிறைய புதுமுக வீரர்கள் மற்றும் இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 5, 2024

தேர்தல் விதிமீறல்: 1.25 லட்சம் புகார்கள் பதிவு

image

தேர்தல் விதிகளை மீறப்படுவதை படம் பிடித்து தேர்தல் கமிஷனுக்கு மக்கள் வழங்குவதற்காக சி-விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. அப்படி அனுப்பப்படும் புகார்களுக்கு, 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியா முழுவதும் இதுவரை 1,25,939 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,25,551 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 71,168 புகார்கள் பதிவாகியுள்ளது.

News April 5, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

image

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை, காங்கிரஸ் கட்சி தீவிரமாக மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.

error: Content is protected !!