India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கொருக்குப்பேட்டையில் வெண்புறாவை பறக்கவிட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அவர், ‘படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வீரர்கள் மதிஷா பத்திரனா மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர், ஆடும் 11 அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக தீக்ஷனா மற்றும் மொய்ன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை அணியின் முக்கிய பவுலர்களான இருவரும் இன்றையப் போட்டியில் விளையாடாதது CSK ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா காலத்தில் இந்தியா அழிந்துவிடும் என பலர் நினைத்தபோதும், 5ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றினோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிற கட்சிகளைப் போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடிய அவர், பாஜக நிச்சயம் சொல்வதை செய்யும் என உறுதி அளித்தார். மேலும், 10 ஆண்டுகளாக மக்கள் அதனை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

விளிம்புநிலை மக்களுக்கு ஆறுதல் அளிக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்யும் வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளதாக கூறிய அவர், சமூக நீதியை அடிப்படையாக வைத்து வாக்குறுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறினார்.

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று 7வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்ந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு பிரசாரத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் தரமாட்டேன் எனக் கூறிய கர்நாடக அரசை, முதல்வர் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சி அமைந்ததும் கிடப்பில் போட்டு விட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் 19.8 சதவீத மக்களுக்கு நடிகர் விஜய்யை பிடித்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. Peoples Studies நிறுவனம், அதிக மக்களால் விரும்பப்படும் நடிகர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதில், அஜித் – 12.6%, ரஜினி – 12.2%, சூர்யா – 3.6%, கமல் – 3.3%, தனுஷ் – 1.9% என மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 19.5% மக்கள் யாரையும் பிடிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு வந்த புகாரின் அடிப்படையில், சென்னை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட 44 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விவரங்கள் தெரியவரும்.

உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அமெரிக்காவில் 62 வயதான நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது கடந்த காலங்களில் தோல்வியடைந்தது. ஆனால் இம்முறை மருத்துவ நிபுணர்கள் வெற்றி கண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த நாள் இன்று (ஏப்.5). கிரிக்கெட் மீதான தீராக் காதலால் TTE வேலையை உதறிவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனி 148(123) ரன்களை குவித்தார். இந்தப் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
Sorry, no posts matched your criteria.