India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஞாயிறு அன்று, ஆடு, கோழி, மீன் இறைச்சி சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதில் ஆடு, கோழி இறைச்சியில் எது நல்லது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆட்டின் தொடை இறைச்சியில் புரொட்டின் சத்து, இரும்புச் சத்து அதிகமுள்ளது. கொழுப்பு, சோடியம் சத்து குறைவாக உள்ளது. ஆதலால் சிக்கனை விட ஆட்டிறைச்சியே உடல் நலனுக்கு சிறந்தது என்று உடல்நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதனிடையே, வாக்குப்பதிவின் போது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கிருந்த வாக்காளர்கள் வாக்களிக்காமல் அலறி ஓடினர். இதன் காரணமாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்.22) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

KKR-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது. இதுவரை 13 போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ள பெங்களூரு அணி, அதில் 4இல் வெற்றியும், 8இல் தோல்வியும் அடைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணிக்கு, இன்றைய போட்டியில் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அசாமில் தாயும், மகளும் 10ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்த 34 வயதான மஜியா காடுனுக்கு 16 வயதில் அப்சானா என்ற மகள் உள்ளார். சிறுவயதில் 10ஆம் வகுப்புத் தேர்வு நேரத்தில் திருமணம் நடந்ததால், மஜியாவால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் மகளுடன் சேர்ந்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மஜியா 49% மதிப்பெண்ணும், அப்சானா 52% மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.

டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் அணி சிக்சர் மழை பொழிந்துள்ளது. தொடக்கம் முதலே வான வேடிக்கை காட்டி வந்த ஐதராபாத் பேட்ஸ்மேன்கள், 18 Four, 22 Six என விளாசியுள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக சிக்ஸ் (7 போட்டிகளில் 99 சிக்ஸ்) அடித்த அணி என்ற பெருமையை ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது. மும்பை – 77, பெங்களூரு – 65, கொல்கத்தா – 62 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பாகிஸ்தானிற்கு பேலிஸ்டிக் ஏவுகணை கருவிகளை வழங்கிய 3 சீன நிறுவனங்களுக்கும், ஒரு பெலாரஸ் நாட்டு நிறுவனத்துக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள அந்த 4 நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், வர்த்தக நிறுவனங்களை ஏவுகணை தொழில்நுட்ப திட்டத்துடன் தொடர்புபடுத்தி, தடை விதிப்பது கடந்த காலத்திலும் நடந்துள்ளதாக கூறியுள்ளது.

பல்லிகளை கண்டால் சிலர் அறுவெறுப்பு அடைவதும், அச்சப்படுவதும் உண்டு. ஆனால் வாஸ்து சாத்திரப்படி, பல்லி பூஜை அறை, வரவேற்பு அறையில் இருப்பது மங்களகரமானது. சில மாநிலங்களில் புதிய வீட்டின் கிரக பிரவேசத்தில் பல்லி சிலைகளை வைத்து வழிபடுவதும் உண்டு. ஜோதிட நம்பிக்கையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாகவும், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய உள்ளது. எனினும், இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும். எனவே, பிற்பகல் நேரத்தில் முதியோர்கள், கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்கவும்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் பெங்குய்யில் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க போகோ ஆற்றில் படகில் 300 பேர் சென்று கொண்டிருந்தனர். அளவுக்கு அதிகமாக ஆள்கள் ஏற்றியதன் காரணமாக பழு தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது. இதில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். எஞ்சியோரை தேடும் பணி நடைபெறுகிறது.

மகாவீர் ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஏப்.21) டாஸ்மாக் கடைகள் இயங்காது. மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17 முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பின்பு நேற்று (ஏப்.20) டாஸ்மாக் மீண்டும் திறக்கப்பட்டது. வார இறுதி என்பதாலும், இன்றும் (ஏப்.21) விடுமுறை என்பதாலும் நேற்றைய தினம் அதிகளவில் மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.
Sorry, no posts matched your criteria.