News April 21, 2024

சிறையில் பாதி, ஜாமினில் மீதி…

image

INDIA கூட்டணி தலைவர்கள் பாதி பேர் ஜாமினில் வெளியே இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவோம் என ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளன. யார் தவறு செய்தாலும் பிடிபடுவார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் ஊழல் செய்யும் போது இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். தண்டனை அடையும் போது மட்டும் பாஜகவை அவர்கள் குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.

News April 21, 2024

பாஜகவில் ஐக்கியமாகும் மதசார்பற்ற ஜனதா தளம்?

image

அனைத்தும் சீராக செல்லும்பட்சத்தில், பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணையும் என்று அக்கட்சித் தலைவர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானபடி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள குமாரசுவாமி, பாஜக தங்களை நல்லவிதமாக நடத்தினால், அக்கட்சியுடன் தனது கட்சி இணையும், 2 தரப்பும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.

News April 21, 2024

விக்ரம் படத்தில் இணைந்த மலையாள நடிகர் சித்திக்

image

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில், மலையாள நடிகர் சித்திக் இணைந்துள்ளார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பை ஓரிரு நாட்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதைக் களத்தில் இப்படம் உருவாக உள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டைட்டில் வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

News April 21, 2024

உணவருந்திய உடன் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் ஆபத்து

image

ஆரஞ்சுப் பழம், அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். அதில் வைட்டமின் சி சத்துகள் உள்ளன. அதேபோல் சிட்ரஸ் அமிலமும் அதிகம் உள்ளது. அதனால் உணவருந்திய உடனே ஆரஞ்சை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், சிட்ரஸ் அமிலம், உடலில் நச்சுக்களை ஏற்படுத்தி பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆதலால் உணவருந்திய பிறகு ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்போம்.

News April 21, 2024

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்.13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாளை (ஏப்.22) மற்றும் நாளை மறுநாள் (ஏப்.23) ஆகிய தேதிகளில் விடுப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, மீண்டும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை தொடர்கிறது.

News April 21, 2024

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13ஆவது சுற்றில், தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார். பிரெஞ்சு வீரர் அலிரேசாவுக்கு எதிரான இப்போட்டியில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் குகேஷ். தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர், பின் தோல்வி நிலையில் இருந்து மீண்டு வந்தார். தனது உத்திகளை சரியாக பயன்படுத்தி மகத்தான வெற்றியைப் பதிவு செய்த குகேஷ், புள்ளிப் பட்டியலில் (8.5 புள்ளிகளுடன்) முதலிடத்திற்கு முன்னேறினார்.

News April 21, 2024

60 வயதில் தொழில், ₹2,100 கோடிக்கு விற்பனை

image

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிஸ்க் பார்மை, கிருஷ்ணதாஸ் பால் என்பவர் தன்னுடைய 60ஆவது வயதில், 2000இல் தொடங்கினார். 4 ஆண்டுகளில் ₹15 கோடி இழப்பு ஏற்பட்டும் மனம் தளரவில்லை. இதனால் 2008இல் ₹200 கோடி, 2021இல் ₹1,250 கோடி, 2023இல் ₹2,100 கோடி என விற்பனை செய்தது. ஆனால் இதனைக் காண பால் இல்லை. 2020இல் பால் காலமானார். அவரின் மகன் அந்த நிறுவனத்தை தற்போது நடத்துகிறார்.

News April 21, 2024

தோல்விக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட் விளக்கம்

image

‘பவர் பிளே’ தான் தோல்விக்கு காரணம் என டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், முதல் 6 ஓவர்களிலேயே எதிரணி 125 ரன்களை குவித்து விட்டது. அதன்பின் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆனால், 260-270 ரன்களை சேஸ் செய்ய வேண்டி இருக்கும் என்று நினைக்கவில்லை. அடுத்து வரும் போட்டிகளில், தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News April 21, 2024

FLASH: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு

image

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) 1 கிலோ விலை ₹127க்கு விற்பனையாகிறது. நேற்று ₹133க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை விற்பனையில் பல இடங்களில் 1 கிலோ ₹240-250 வரை விற்பனையாகிறது. முட்டை கொள்முதல் விலை ₹5 ஆக தொடர்கிறது.

News April 21, 2024

சிக்சர் சாதனையை சமன் செய்தது ஹைதராபாத்

image

டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி, பவர் பிளேவில் (முதல் 6 ஓவர்களில்) 125/0 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி, 266 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில், 4ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த தங்களது சாதனையை (22 சிக்ஸ்) சமன் செய்துள்ளது.

error: Content is protected !!