News April 21, 2024

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?

image

தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், எல். கணேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. இதுபோல மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் அல்லது ஆளுநர் பதவியில் ஏதேனும் ஒன்று அளிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

News April 21, 2024

13,000 அணுகுண்டுகளை வைத்துள்ள 9 நாடுகள்

image

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகள், 13,000 அணுகுண்டுகளை குவித்து வைத்திருப்பதாக அணுசக்தி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 6,000, அமெரிக்காவிடம் 5,000 அணுகுண்டுகள் இருப்பதாகவும், அதற்கடுத்து சீனாவிடம் 410, பிரான்சிடம் 290, இந்தியாவிடம் 160, பாகிஸ்தானிடம் 170, இங்கிலாந்திடம் 120, வடகொரியாவிடம் 55, இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

News April 21, 2024

‘சூர்யா 44’ படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசை?

image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பீரியாடிக் ஆக்ஷன் கதைக் களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 21, 2024

சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்

image

மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் இருந்து வாக்களிக்க வெளியூர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சென்னை – நெல்லை இடையே 2 நாள்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இரவு 10.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில் காலை 10.15க்கு சென்னை வந்தடைகிறது.

News April 21, 2024

பாஜக மீண்டும் வந்தால் அரசியலமைப்பு மாற்றப்படும்

image

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இடஒதுக்கீடே இருக்காது என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார். மீண்டும் ஒருமுறை பாஜக வென்றால் நாட்டில் பன்முக தன்மை சீர் குலையும். எதிர்க்கட்சிகளை சூறையாடிவிட்டு ஒற்றையாட்சி முறை அமல்படுத்தபடும். அந்த ஜனநாயக படுகொலையை தடுக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று அவர் கோரினார்.

News April 21, 2024

ஆரோக்கிய பானங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு

image

ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் விற்கப்படும் பானங்களில் சேர்க்கப்படும் அதிக சர்க்கரையால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். போர்ன்விட்டாவில் அதிக சர்க்கரை கலக்கப்பட்டிருந்ததால், ஆரோக்கிய பான பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதுபோல சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுவது குழந்தைகளுக்கு உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News April 21, 2024

IPL: அதிவேக அரைசதம் விளாசிய வீரர்கள்

image

▶ஜெய்ஸ்வால் (RR)- 13 பந்துகளில் vs KKR (2023) ▶கே.எல்.ராகுல் (PBKS)- 14 பந்துகளில் vs DC (2018) ▶பேட் கம்மின்ஸ் (KKR)- 14 பந்துகளில் vs MI (2022) ▶ஜேக் ஃப்ரேஸ் மெகர்க்- 15 பந்துகளில் vs DC (2024) ▶யூசுப் பதான் (KKR)- 15 பந்துகளில் vs SRH (2014) ▶நிகோலஸ் பூரண் (LSG)- 15 பந்துகளில் vs RCB (2023) ▶சுனில் நரைன் (KKR)- 15 பந்துகளில் vs RCB (2017) ▶சுரேஷ் ரெய்னா (CSK)- 16 பந்துகளில் vs PBKS (2014)

News April 21, 2024

பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார் மோடி

image

கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் பிரதமர் மோடி என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். கேரளாவின் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார். இங்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார் என்ற அவர், மோடியும், ராகுலும் கேரளாவை அவமதிப்பதில் ஓரே மாதிரியாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

News April 21, 2024

திருமணத்திற்குச் சென்ற 9 பேர் உயிரிழப்பு

image

ராஜஸ்தானில் திருமணக் குழுவினர் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ராஜஸ்தான் துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ஒரே வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

News April 21, 2024

80 பவுன் தங்க சங்கிலியை கைப்பற்றிய நடராஜன்

image

டெல்லிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நடராஜன் 80 பவுன் தங்க சங்கிலியை கைப்பற்றினார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஹைதராபாத் அணி சுழற்சி முறையில் இந்த செயினை வழங்கும். அந்த வகையில், நேற்றைய போட்டியில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுக்களை நடராஜன் வீழ்த்தினார். நடப்பு தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் 7ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

error: Content is protected !!