News April 21, 2024

ஊழல்வாதிகளின் அரசை மம்தா நடத்துகிறார்

image

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மக்களுக்கு ஆட்சி நடத்தாமல் மம்தா தனது கட்சியினர் பயன் அடையும் வகையில் நிர்வாகத்தை நடத்துகிறார். ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்களின் அரசாகவே இந்த ஆட்சி இருக்கிறது. திரிணாமுல் நிர்வாகிகளுக்கு மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு அனைத்தும் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

News April 21, 2024

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஷுப்மன் கில்

image

ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த, ஷுப்மன் கில் சிறந்த தேர்வாக இருப்பார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ஷுப்மன் கில், நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 3(7) வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி வீரர்களுடன் போட்டிப் போட்டு வரும் அவருக்கு, இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 21, 2024

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் சென்றடைவதே இலக்கு

image

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வதே தனது நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பத்தினர் ஜல் ஜீவன் திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். துரதிஷ்டவசமாக, ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு இதிலும் ஊழல் செய்தது. இல்லையெனில், இலக்கை எட்டியிருப்போம் என்றார்.

News April 21, 2024

மென்று முழுங்கும் தேர்தல் ஆணையம்

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகக் கூறிய தேர்தல் ஆணையம், தற்போது 69.72 சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், கணக்கீட்டில் இவ்வளவு மாறுபாடு இருப்பதற்கான காரணம் என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உரிய விளக்கம் அளிக்குமா தேர்தல் ஆணையம்?

News April 21, 2024

4 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றில் சிஎஸ்கே

image

சிஎஸ்கே அணி விளையாடிய 7 போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்வி என எட்டு புள்ளிகள் பெற்று 0.52 என்ற ரன் ரேட் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி மேலும் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகளில் கட்டாயம் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சிஎஸ்கே சென்னையில் மேலும் 4 போட்டிகள் விளையாட உள்ளது அந்த அணிக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும்.

News April 21, 2024

பட்டாசு வெடித்தால் கூட பாகிஸ்தான் விளக்கம் தருகிறது

image

காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பின்மை நிலவியதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கரில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பயங்கரவாதிகள் எங்கு வேண்டுமானாலும் ஊடுருவி வெடிகுண்டு வைப்பார்கள். ஆனால், தற்போது பட்டாசு வெடித்தால் கூட, தாங்கள் இதில் ஈடுபடவில்லை என பாகிஸ்தான் விளக்கமளிக்கிறது என்றார்.

News April 21, 2024

முதலில் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்

image

முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். கடலூரில் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கோமதி என்ற பெண் திமுகவினரால் அடித்துக் கொல்லப் பட்டிருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

இந்த வார சமையல் டிப்ஸ்

image

*முட்டையில் சிறிது வெண்ணெய்யை கலக்கி பிறகு ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும். *பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக வரும். *குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். *வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெய் ஊற்றி வதக்கினால் விரைவாக வதங்கிவிடும்.

News April 21, 2024

மம்தா பானர்ஜி விரைவில் கூட்டணியில் இணைவார்

image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் I.N.D.I.A கூட்டணியில் இணைவார் என கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளது. மம்தா பானர்ஜியைத் தவிர கூட்டணியில் உள்ள மற்ற அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது கூட்டணியில் இணையமாட்டேன் எனக் கூறியுள்ள மம்தா, விரைவில் எங்கள் கூட்டணியில் இணைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது

image

கோடை விடுமுறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் விதிகளை மீறி தனியார் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!