India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. PBKS தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்பிரீத் பிரார் 29 ரன்கள் எடுத்தனர். GT சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் 4, நூர் அஹமது, மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து GT அணிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரெனே ரெமண்ட் – லிண்டா என்ற வயதான தம்பதி சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா சென்றனர். வெளிநாட்டில் அவர்கள் ரோமிங் மொபைல் டேட்டாவை பயன்படுத்தியுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய அவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வெளிநாட்டு டேட்டாவை பயன்படுத்தியதால் ரூ.1.19 கோடிக்கு மொபைல் கட்டணம் வந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

கேரளாவில் இருந்து கோழி மற்றும் வாத்துக்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாஜக தன்னையும், தனது உறவினர் அபிஷேக் பானர்ஜியையும் குறிவைப்பதால் பாதுகாப்பற்றதாக உணர்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இன்று தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் நடவடிக்கைகளைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. திரிணாமுல் காங்., தலைவர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பின்னப்படும் சதிவலைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்திற்கான புதிய பயணம் தேர்தலிலிருந்து தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் ஆன்மிக குருக்களின் போதனைகள் தேவைப்படுவதாகக் கூறினார். யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரியத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. புதிய தலைமுறை இளைஞர்களும் நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாகக் கருவதாகக் கூறினார்.

கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியிருப்பதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறுவதால் கோடைக்காலத்தில் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது அரசு. இந்த தடை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அசைவப் பிரியர்கள் அதிக பேர் மீன் வாங்கக் குவிந்ததால் விலை இரட்டிப்பானது.

சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு மாலையில் புறப்பட்டார். நாளை அதிகாலை 5:30 மணியளவில் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் (ஏப். 23) அதிகாலை 5:51 – 6:10 வரை நடைபெறவுள்ளது. இதனால் மதுரை முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, டெக் மகேந்திரா, HCL டெக்னாலஜி, மாருதி சுசூகி, இண்டசிண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகளை பொறுத்து அந்நிறுவன பங்குகளில் தாக்கம் இருக்கும்.

அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வாதிகாரத்திற்கு எதிராக I.N.D.I.A கூட்டணி போராடி வருவதாகத் தெரிவித்தார். சர்க்கரை நோயாளியான எனது கணவர் 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால், இன்சுலின் தராமல் அவரை கொல்லப் பார்க்கிறார்கள் என்றார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த 1.7 கோடி பெண்களை இத்திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, தேர்தல் முடிந்த பின்னர், இத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
Sorry, no posts matched your criteria.