News April 24, 2024

குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக வைத்தது ஏன்?

image

எந்த நாடும் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படை தகுதியாக மாற்றவில்லை என பினராயி விஜயன் பாஜகவை விமர்சித்துள்ளார். குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அடிப்படை தகுதியாக மதத்தை பாஜக முன் வைக்கிறது. இதனால் மதச்சார்பற்ற விழுமியங்கள் அழிக்கப்படுகிறது. உலகில் எந்த நாடும் அகதிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதில்லை என்ற அவர், பாஜகவின் செயல்களுக்கு காங்கிரஸ் துணைப் போகிறது என்றார்.

News April 24, 2024

IPL தொடரில் இருந்து விலகினார் மார்ஷ்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணியின் வீரர் மிட்சல் மார்ஷ் முழுமையாக விலகிவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் பாண்டிங் அறிவித்துள்ளார். காயம் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதி சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பினார் மார்ஷ். ஆனால், அவருடைய தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகியிருக்கிறார்.

News April 24, 2024

சொமேட்டோ பயன்பாட்டுக் கட்டணம் உயர்வு

image

உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பயன்பாட்டுக் கட்டணத்தை ₹5 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹3 ஆக இருந்த பயன்பாட்டுக் கட்டணத்தை ₹1 உயர்த்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ₹1 உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு 20 லட்சம் வீதம் ஆர்டர்கள் விநியோகம் செய்யும் நிலையில், இதன் மூலம் அதன் லாபம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவித்துள்ளது.

News April 24, 2024

களைகட்டும் சித்திரைத் திருவிழா

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக, கோரிப்பாளையம் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோரிப்பாளையம் பகுதியில் பக்தர்கள் குவிந்துள்ளதால் திருவிழா களைகட்டியுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் 2,400 பேர் மட்டுமே ஆற்றில் இறங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

நீதிமன்றத் தீர்ப்புகளில் பாஜக ஆதிக்கம்

image

நீதிமன்றத் தீர்ப்புகளில் பாஜக தலைவர்களின் ஆதிக்கம் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2016இல் 25,753 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் அந்த நியமனத்தை ரத்து செய்தது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய மம்தா, பாஜக நீதித்துறை மற்றும் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News April 24, 2024

கிட்னி செயலிழப்புக்கான அறிகுறிகள்

image

1) சிறுநீர் அடிக்கடி கழித்தல்
2) இரத்தத்தில் அசுத்தம் சேர்வதால் மிக சோர்வாக உணர்தல்
3) இரத்த அழுத்தம் அதிகரித்தல்
4) பசியின்மை மற்றும் குமட்டல்
5) தோல் வறட்சி
6) தூக்கமின்மை
7) கால்களில் வீக்கம்
ஆகியவை கிட்னி செயலிழப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

News April 24, 2024

ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 179/9 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி சார்பில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தனர். RR சார்பில் சாஹல் 1, ஆவேஷ் கான் 1, போல்ட் 2, சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து RR அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு கிடைக்கும்?

image

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தே மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

News April 24, 2024

20 வருடங்களுக்கு பிறகு இணைந்த ஜோடி

image

மோகன்லால் – ஷோபனா இணைந்து நடிக்கும் ‘L 360′ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக நடிகை ஷோபனா சில நாள்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56ஆவது படமாகும். மோகன்லாலுக்கு இது 360ஆவது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.

News April 24, 2024

கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து நீக்கம்

image

கர்நாடகாவில் முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த முறை பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பாஜகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!