News April 24, 2024

கஞ்சா புழக்கத்தை ஏன் தடுக்க முடியவில்லை?

image

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? என தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை வினவியுள்ளார்.

News April 24, 2024

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!

image

சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு சித்ரா பெளர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செய்ய இயலாதவர்கள், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

News April 24, 2024

ஏப்ரல் 23 வரலாற்றில் இன்று!

image

➤ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் கட்டப்பட்டது. ➤ 1661 – இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார். ➤ 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது. ➤ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான சத்யஜித் ரே காலமானார். ➤2005 – முதலாவது யூடியூப் காணொளி “ஜாவெட்” என்பவரால் வெளியிடப்பட்டது.

News April 24, 2024

ரசாயன மாம்பழங்களை கண்டறிவது எப்படி?

image

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்போருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க மாம்பழம் வாங்கி வந்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் மாம்பழங்களைப் போடுங்கள். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையாகப் பழுக்க வைத்த பழம், மேலே மிதக்கும் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைத்த பழங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

News April 24, 2024

என்று தணியும் இந்த தனியார் பள்ளிகள் மோகம்?

image

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை. இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில், சாலையில், நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து, காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

News April 24, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶குறள் எண்: 10
▶குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

News April 24, 2024

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க போவதில்லை

image

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் நரைன், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. இப்போது அந்த கதவுகள் மூடப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.

News April 24, 2024

சிஏஏ சட்டம் ரத்துச் செய்யப்படாது

image

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. எனவே சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லையென உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படுமென முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, 2014,2019ஆம் ஆண்டு தேர்தல்களை போலவே, காங்கிரஸுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

சித்ரா பெளர்ணமியின் சிறப்புகள் அறிவோமா?

image

பெளர்ணமி என்றால் முழுமை என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில், வரும் பௌர்ணமி மிகவும் நல்லது. இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவப்பெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வணங்குவதால் உடலும் உள்ளமும் நலம் பெறும். இன்றைய தினம் சூரியனின் மறைவும் சந்திரனின் உதயமும் ஒரே நேரத்தில் நடக்கும்.

News April 24, 2024

காவிக்கு மாற்றியதில் என்ன தவறு?

image

காவி என்பது தியாகத்தின் வண்ணம். எனவே காவிக்கு மாற்றியதில் எந்த தவறுமில்லையென தமிழிசை தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் இலச்சினை காவியாக மாற்றியதற்கு, இந்தியாவை காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு தமிழிசை தனது X பக்கத்தில், “எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கிலப் பெயரைத் தமிழாக்கம் செய்யப் போகிறீர்” என வினவியுள்ளார்.

error: Content is protected !!