News April 24, 2024

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

News April 24, 2024

லக்னோ அணிக்கு பதிலடி தருமா சென்னை அணி?

image

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். இதுவரை இரு அணிகளும் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் சம பலத்தில் உள்ளன. உள்ளூரில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் சென்னை அணி வென்றுள்ளது. சென்னை அணியின் வெற்றி இன்று தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

News April 24, 2024

புத்தகத்தில் உலகை படிப்போம்

image

ஒரு நல்ல புத்தகம், நூறு நண்பர்களுக்கு சமம். நல்லொழுக்கத்தை கற்றுத் தருவதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் பல வழிகளில் புத்தகம் நமக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. அத்தகைய அறிவுசார் சொத்துக்கான புத்தகங்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. வாசிப்பை நேசிக்கும் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் குறித்து கமெண்டில் பகிரலாம்.

News April 24, 2024

கார்ல்சென் கணிப்பை பொய்யாக்கிய குகேஷ்!

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் நகமுரா, காருனா, நெபோம்நியாச்சி ஆகியோரில் ஒருவரே வெற்றி பெறுவர் என நார்வே செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சென் கணித்திருந்தார். ஆனால் தனது கணிப்பைத் தகர்த்த குகேஷ்க்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ‘குகேஷ் இளம் வீரர்களில் பெரியளவில் பிரபலம் இல்லை. இதனால் அவரைப் பற்றி மதிப்பிடும் போது குழப்பமே மிஞ்சும். ஆனால் தான் மிகவும் வலிமையானவர் என்பதை நிரூபித்து விட்டார்’ என்றார்.

News April 24, 2024

கிண்டலுக்குள்ளான பள்ளி மாணவிக்கு குவிந்த ஆதரவு!

image

உ.பி.,யில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98.50 சதவீத மதிப்பெண்கள் பெற்று சீதாப்பூரைச் சேர்ந்த பிராச்சி நிகம் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். படிப்பில் சாதித்த மாணவியை பாராட்டாமல், சிலர் அவருக்கு அரும்பு மீசை இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். இந்நிலையில், மாணவிக்கு ஆதரவாக, புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடித்தவர்களை எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

News April 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஏப்ரல் – 23 | ▶ சித்திரை – 10 ▶கிழமை: செவ்வாய் | ▶திதி: பெளர்ணமி ▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: அதிகாலை 01:30 – 02:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: 03:00 – 04:30 வரை ▶எமகண்டம்: காலை 09:00 – 10:30 வரை ▶குளிகை: மதியம் 12:00 – 01:30 வரை ▶சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News April 24, 2024

தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

image

தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை தொடங்கி இரவு வரை கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக பதிவானது. இதனால் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அங்கு ஏப்.3இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.

News April 24, 2024

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி திட்டம்

image

ஒபெக் கூட்டமைப்பு, வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 2025க்குள் 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6% ஆக இருக்குமென ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

இன்று வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

image

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். காலை 7.25 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றி ராம ராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார்.

News April 24, 2024

பெங்களூருவில் மேலும் ஒரு ஹோட்டலுக்கு மிரட்டல்

image

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்தது போன்று கடம்பூர் ஹோட்டலிலும் குண்டுகள் வெடிக்குமென ஜாலஹள்ளி காவல்நிலையத்திற்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மோப்ப நாய்,வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஹோட்டல் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!