News April 24, 2024

அன்பால் நெகிழ்ந்து போன ‘முத்துப்பாண்டி’

image

‘கில்லி’ படம் ரீரிலீஸாக உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. புதுப்படங்களுக்கு இணையாக இப்படம் கொண்டாடப்படுவது திரைத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அளப்பரிய அன்பை வெளிப்படுத்தும் ரசிகர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முத்துப்பாண்டி மீதான ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணமா?

image

முன்னணித் திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மகனைத் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகைக்கடை உரிமையாளர் மகனும், கீர்த்தி சுரேஷும் 13 ஆண்டுகளாகப் பழகி வருவதாகவும், திருமண ஏற்பாடுகள் அமைதியாக நடந்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்துக் கீர்த்தி சுரேஷ் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

News April 24, 2024

வெயில் புழுக்கத்தில் இருந்து தப்பிக்க எளிய வழி

image

வெயில் வாட்டி எடுப்பதால், வீடுகளில் கடும் புழுக்கம் நிலவுகிறது. ஏசி இருப்போர் நிம்மதியாக இருக்கும் நிலையில், ஏ.சி. இல்லாதோர் அவதிப்படுகின்றனர். ஆனால், குளிர்ந்த காற்று கிடைக்க எளிய வழி ஒன்று உள்ளது. துணியைத் தண்ணீரில் நனைத்து, அதை ஜன்னல்களில் தொங்க விடுவதாலும், பூஞ்செடி தொட்டிகளை ஜன்னல் அருகே வைப்பதாலும் ஜில்லென்ற காற்று வீசும். இது அறைகளுக்குள் நிலவும் புழுக்கம் குறைய வழிவகுக்கும்.

News April 24, 2024

ரன் குவிப்பில் டிராவிட்டை முந்தினார் ஜெய்ஸ்வால்

image

ஐபிஎல் ரன்குவிப்பில் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 104 ரன்களை அவர் விளாசினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி சார்பில் அவர் குவித்த ரன்கள் எண்ணிக்கை 1,397ஆக அதிகரித்தது. ராகுல் டிராவிட் 1,324 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் 5ஆவதாக இருந்தார். அதை நேற்று ஜெய்ஸ்வால் முந்தினார்.

News April 24, 2024

‘கூலி’ டீசரில் இதைக் கவனிச்சீங்களா?

image

ரஜினியின் ‘கூலி’ பட டீசரை பார்த்த ரசிகர்கள் அதனை டீகோடிங் செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் தங்கம் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால், படம் தங்கக் கடத்தல் தொடர்புடையதாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள் என ரஜினி பேசும் வசனத்தை ஏற்கெனவே அவர் ‘ரங்கா’ படத்தில் பேசி இருக்கிறார். அத்துடன், இது சூர்யா தோன்றும் ‘ரோலக்ஸ்’ பாத்திரத்தின் முன்கதை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News April 24, 2024

வேறு கட்சிக்கு “இரட்டை இலை” சின்னம்

image

அதிமுகவின் சின்னமான “இரட்டை இலை”யை கேரளத்தில் கேரள காங்., எனும் மாநில கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அங்கீகாரம் பெற்ற கட்சியான அதிமுகவின் சின்னத்தை இன்னொரு மாநில கட்சிக்கு வழங்க முடியுமா? என கேள்வி எழுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியின் சின்னத்தை கட்சி போட்டியிடாத வேறு மாநில கட்சிக்கு வழங்குவது நடைமுறைதான். ex: தெலுங்கு தேசத்தின் சைக்கிள் சின்னத்தை தமிழகத்தில் தமாகா பெற்றது.

News April 24, 2024

கர்நாடகாவில் காங்கிரசுக்கு விசிக ஆதரவு

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழகம் தவிரத் தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 6 தொகுதிகளிலும், கேரளத்தில் 3 தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகத் துணை முதல்வர் சிவக்குமாரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தகட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்.26ஆம் தேதி, அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News April 24, 2024

மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார் முதல்வர்

image

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்.19இல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனால் அவர் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு தலைமைச் செயலகம் செல்லவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த தேர்தல் பரபரப்பு தற்போது ஓய்ந்த நிலையில், இன்று அவர் மீண்டும் தலைமைச் செயலகம் சென்றார்.

News April 24, 2024

மீண்டும் மன்னிப்பு விளம்பரம் வெளியிட ராம்தேவ் முடிவு

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் வெளியிட பாபா ராம்தேவ் முடிவு செய்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, முன்னரே மன்னிப்பு விளம்பரம் வெளியிடாமல் நேற்று வெளியிட்டது ஏன்? பெரிய அளவில் வெளியிடப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, விரைவில் பெரிய விளம்பரம் வெளியிட இருப்பதாக ராம்தேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!