India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024ஆம் ஆண்டின் 4ஆவது பௌர்ணமியான இன்று பிங்கு மூன் எனப்படும் சூப்பர் மூனைப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்காவில் வசந்தக் காலத் தொடக்கத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்திலும், நேரத்திலும் இந்த நிலவு தோன்றுவதால் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது. பெரிதாகத் தோன்றும் நிலவை அமெரிக்காவில் இன்று மாலை 7.49 மணிக்கும், இந்தியாவில் நாளை காலை 5.18 மணிக்கும் பார்க்க முடியும்.

தனது உறவினரான அபிஷேக் பானர்ஜியை பாஜகவினர் கொலை செய்ய முயன்றதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவினருக்கு எதிராகப் பேசும் அனைவரையும் கொல்லவோ, சிறையில் தள்ளவோ முயல்வதாகக் கூறிய அவர், தேர்தலில் வெற்றிபெறுவீர்கள் என நம்பிக்கை இருந்தால் மக்களை ஏன் மிரட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னையும், அபிஷேக்கையும் பாஜக குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன், நடிகர் அருண் விஜய்யின் 36ஆவது படத்தை இயக்கவுள்ளார். சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்.

லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் ருதுராஜ் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 64* ரன்கள் அடித்துள்ளார். இதையடுத்து CSK அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிக முறை (17) 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக டு ப்ளஸி (16) உள்ளார். CSK 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெற்றோர்களே அனைத்துக்கும் காரணம் என சர்மிளா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர்களை உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை – லக்னோ அணிகளுக்கு இடையிலான 39ஆவது லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போடப்பட்ட நிலையில், லக்னோ அணி டாஸை வென்றதுடன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த நிலையில், நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் ருதுராஜ், தொடர்ந்து 7 போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்த கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார்.

இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் 120 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனத்தைத் தாக்கும் இஸ்ரேலுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மேலும் 20 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக, 30 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும், ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் பேசும் பாஜகவுக்குத் தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களைத் தடுக்க இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் ஒரு படகில் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்றனர். அப்போது மணல் திட்டில் படகு மோதியதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Sorry, no posts matched your criteria.