India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களின் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய மனு நாளை தள்ளுபடியாகவே வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்கு ஒப்பானது. சுமார் 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில், அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி முடிவுகளை அறிவிக்க 15 நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் எனக் கூறிய ப.சிதம்பரத்தின் எண்ணம் பலிக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், சிஏஏ திருத்தச் சட்டம் வேண்டாம் எனக்கூறும் சிதம்பரம், சிஏஏ சட்டத்தின் குறைபாடுகளைக் கூறவே இல்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவே காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு பேசி வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.

விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. மக்களவைத் தேர்தலின்போது, EVM எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி ஒப்பிடக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.

உறங்க செல்வதற்கு முன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது உங்களை நிதானமாக்கி மன அமைதியைத் தரும். கால்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றைத் தளர்த்தி நேராக வைத்துப் படுக்கலாம். இதற்குப் பிறகு உறங்க முயற்சி செய்யலாம். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போனை தள்ளி வையுங்கள். நிறைவான தூக்கத்திற்கு அறையைக் காற்றோட்டமாகவும், இருட்டாகவும் வைத்திருக்க வேண்டும்.

உலகில் உள்ள 184 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளுக்குச் செல்வோர் வசதிக்காக, ஒரு நாளைக்கு ₹133 முதல் ₹2998 வரை பயணத்தின் கால அளவைப் பொறுத்துத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் அடித்தனர். வழக்கம்போல அதிரடியாக ஆடிய துபே இன்று 7 சிக்ஸர்கள் விளாசினார். இதையடுத்து LGS அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. LSG சார்பில் ஹென்றி, மோசின் கான், யஷ் தாகூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 56 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்களை எட்டினார். சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி தற்போது வரை 18 ஓவர்களில் 178/3 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்க மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இமாச்சலைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை, தனது குழந்தையைக் கவனிக்க விடுப்பு வழங்க மாநில அரசு மறுப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், தாய்மார்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, அவர்களைப் பணியை விட்டே வெளியேற்றுவதற்குச் சமம் எனக் கூறியுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் சென்னை அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ரஹானே, மிட்செல், ஜடேஜா மூவருமே ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் 12ஆவது ஓவரில் களமிறங்கிய ஷிவம் தூபே 12.5ஆவது ஓவரில் முதல் சிக்ஸரைப் பதிவு செய்தார். அதன்பின் ருதுராஜ் 14.1ஆவது ஓவரில் தனது முதல் சிக்ஸரை அடித்தார்.
Sorry, no posts matched your criteria.