News October 26, 2025

150 டிகிரிகள்.. பட்டங்களின் களஞ்சியமான சென்னை நபர்!

image

150 டிகிரிகளை முடித்துள்ள சென்னையை சேர்ந்த பேராசிரியர் VN பார்த்திபன் ‘பட்டங்களின் களஞ்சியம்’ என போற்றப்படுகிறார். தனது முதல் பட்டப்படிப்பில் ஜஸ்ட் பாஸானதை அடுத்து, தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் 1981-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அயராமல் படித்து வருகிறார். MA, MCom, MSc, ML, MPhil, MBA உள்ளிட்ட பல பட்டங்களை வாங்கியுள்ளவர், 200 பட்டங்களை பெறுவதே தனது இலக்கு என்கிறார்.

News October 26, 2025

முதல்வருக்கு படம் பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா? EPS

image

நெல் மணிகளை பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கைகள், படக்குழுவினரின் கைகளை பற்றியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். பைசன் படக்குழுவை CM பாராட்டியதை சுட்டிக்காட்டிய அவர், படம் பார்த்து பாராட்ட நேரம் இருக்கும் முதல்வருக்கு விவசாயிகளின் வேதனையை கேட்க நேரம் இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மழையில் நனைந்து முளைத்த நெல்லை பிடித்த போது, விவசாயிகளின் வேதனையை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 26, 2025

BREAKING: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? பறந்தது உத்தரவு

image

<<18108169>>’மொன்தா’ புயல்<<>> முன்கூட்டியே உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 26, 2025

4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

image

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

News October 26, 2025

EPS துரோகம் செய்பவர் என்பது விஜய்க்கு தெரியாதா? TTV

image

சொந்த கட்சிக்காரர்களுக்கே துரோகம் செய்த EPS, தனக்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா, அவர் என்ன சிறு பிள்ளையா என்று டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை; நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

News October 26, 2025

வங்கிக்கடன்.. வந்தது HAPPY NEWS

image

தங்க நகைகளை போலவே, இனி வெள்ளி நகைகளை வைத்தும் கடன் பெற RBI ஒப்புதல் அளித்துள்ளது. இது 2026 ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 kg வெள்ளியை அடகு வைக்கலாம். அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வெள்ளியை அடகு வைத்து கடனாக பெறலாம். ₹1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளுக்கு ₹85 ஆயிரம் வரை கடன் கிடைக்கும். தங்கத்திற்கு இணையாக பலரும் வெள்ளி வாங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News October 26, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பா?

image

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.

News October 26, 2025

ரோஹித் சர்மா Retirement எப்போது? புதிய தகவல்

image

ரோஹித் சர்மா நடப்பு ஆஸி., தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில், ரோஹித்தின் எதிர்காலம் குறித்து அவருடைய சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் 2027 WC-ல் விளையாட எண்ணுவதாகவும், அதற்கு பின்பே ஓய்வை அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னம்பிக்கையால் மட்டுமே ரோஹித் சர்மா இதுவரை கிரிக்கெட்டில் தொடர்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

News October 26, 2025

FLASH: முன்கூட்டியே உருவாகிறது ‘மொன்தா’ புயல்

image

வங்கக்கடலில் நாளை உருவாகும் எனக் கணிக்கப்பட்டிருந்த ‘மொன்தா’ முன்கூட்டியே இன்று மாலை 5:30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. மேலும், இது நாளை மறுநாள் காலை தீவிர புயலாக வலுப்பெற்று அன்றே மாலை அல்லது இரவு ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

1 – 14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி

image

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆய்வு ஒன்றில் இந்த பாதிப்பு 26% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக TN-ல் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக, அமைச்சர் மா.சு., அறிவித்துள்ளார். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!