News June 17, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினி வழங்கப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த கையடக்கக்கணினியை எனது பள்ளி சார்பாக (ஆசிரியர் பெயர்) எனும் பெயர் கொண்ட இடைநிலை ஆசிரியராகிய நான் பெற்றுக்கொண்டேன் என்றும், இதனை எனது பள்ளியில் பொறுப்புடன் ஒப்படைப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன் என இடைநிலை ஆசிரியர்கள் கையெப்பம் இடவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
திமுக கூட்டணியில் அடுத்த கட்சி.. முடிவு இறுதியாகிறது

தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்ததாக தகவல் கசிந்துள்ளது. இதில் கூட்டணியை பற்றி அனைவரும் டிஸ்கஸ் செய்த நிலையில், இறுதியாக அன்புமணி இருக்கும் அணிக்கு போவதாக இல்லை என ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், NDA கூட்டணியை தவிர்த்து ராமதாஸ் தரப்பு திமுக அல்லது தவெக கூட்டணியை தேர்வு செய்யலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News January 20, 2026
பேரவையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் கவர்னர்

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனை கண்டித்த CM ஸ்டாலின், கவர்னரின் செயல் அவையின் மரபிற்கு அவமதிப்பு எனவும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். இதனால் கவர்னர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக CM ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.


