News March 26, 2024
விராட் கோலிக்கு ஆரஞ்சு கேப்

அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை, பெங்களூரு வீரர் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார். பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 77 ரன்கள் குவித்தார். அணியின் வெற்றிக்கு காரணமான அவருக்கு, ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் மொத்தமாக 98 ரன்கள் எடுத்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Similar News
News November 13, 2025
500 இடங்களில் போலீஸ் ரெய்டு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு & காஷ்மீரில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜமாத் – இ- இஸ்லாமி (JeI) உள்ளிட்ட இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பான இடங்கள் உள்பட 500 இடங்களில் போலீசாரும், ராணுவமும் சோதனை நடத்தி வருகின்றனர். JeI அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஆக்டிவ்வாக செயல்பட தொடங்கியதாக கிடைத்த உளவு தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
News November 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 13, 2025
அர்ஜுன் டெண்டுல்கரை கழற்றிவிட்ட மும்பை?

சஞ்சு சாம்ஸன்-ஜடேஜா டிரேடிங்கை தொடர்ந்து, வேறு சில அணிகளும் வீரர்களை பரிமாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் சர்துல் தாக்கூரை அவரது அடிப்படை ஏலத் தொகையான ₹2 கோடிக்கு மும்பை அணிக்கு டிரேட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை பெற்றுள்ளதாகவும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


