News August 21, 2024
அக்.,29 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு

நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்களார் பட்டியல் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியில் 1810 முகவர்கள் ஈடுபடுகின்றனர். 1.1.2025 தேதியை தொகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வரைவு பட்டியல் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகிறது. அன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 18, 2026
நெல்லை: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

நெல்லை மக்களே, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு <
News January 18, 2026
நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.
News January 18, 2026
நெல்லை: கஞ்சாவை வைத்து கொண்டே போலீசுக்கு மிரட்டல்!

பாளை போலீசார் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த எம்.கே.பி நகரை சேர்ந்த முத்துசாமி (36) என்பவரை சோதனை செய்ய முற்பட்டபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு பேசி அச்சுறுத்தியுள்ளார். அவரை சோதனை செய்ததில் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 240 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்தனர்.


